Shopping Cart

கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் கூல் கூல் பானங்கள்

August 24, 2018

கோடைக்கு ஏற்ற ஜில் ஜில் கூல் கூல் பானங்கள்... இப்போ ஆன்லைனில்
கோடையை குளிர்ச்சியாக்கும் பானங்கள்... இப்போ ஆன்லைனில்

கத்திரி வெயில் வரும் முன்பே சூரியனின் ருத்ர தாண்டவம் தொடங்கி விட்டது. கோடைக்கேற்ற பானங்களை நாடி ஓடத் தொடங்கிவிட்டனர்.

கிராமங்களில் உள்ள வீடுகளில் நீர் மோர், நீராகாரம், கம்மங்கூழ், கேப்பைக்கூழ், எலுமிச்சை ஜூஸ், நன்னாரி சர்பத் என தயாராக வைத்திருப்பார்கள்.

நகரங்களிலோ ரெடிமேட் ஜூஸ்கள்தான் கிடைக்கின்றன. நகரவாசிகளின் ஏக்கத்தைப் போக்க கம்பு கூழ் மிக்ஸ், இயற்கையான பழரசங்களையும் www.tredyfoods.com விற்பனை செய்கின்றனர்.

இயற்கையான திராட்சை சாறு

திராட்சைச் சாறு, கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அளிக்கிறது. உடற்சூடு, நீர்க் கடுப்பு, வெட்டை சூடு, ஜீரண கோளாறுகளுக்கு இயற்கை திராட்சை ரசம் அருமருந்து.

எலுமிச்சை தேன்

எலுமிச்சம் பழத்தை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து விட்டு அதில் தேன் கலந்து குடிக்க, கோடை வெயிலுக்கு சுவையோடு குளிர்ச்சியை தரும்.

வெட்டிவேர்

வெள்ளரிக்காய்களைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு மோர் ஊற்றி அதில் கொத்துமல்லி இலை, சீவிய இஞ்சி, வெட்டிவேர் கிள்ளிப் போட்டு மணக்க மணக்க வெயிலில் இரண்டு டம்ளர் பருகிப் பாருங்கள். உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பரவும்.

நன்னாரி சர்பத்

எலுமிச்சையை பிழிந்து சாறெடுத்து தண்ணீருடன் சேர்க்கவும். சர்க்கரை, ஒரு துளி உப்பு சேர்த்து நன்கு கரைத்து வடிக்கட்டவும். அதில் நன்னாரி எசன்ஸ் சேர்த்து பசுமையா புதினா இலையை சேர்த்து ப்ரிட்ஜில் வைக்கவும். புதினா மணம் நன்னாரி சர்பத்தில் இறங்கியிருக்கும். மணமும் சுவையும் குடிக்க வெயிலுக்கு இதமாக இருக்கும். நன்னாரி பித்தத்தை போக்கும், நாவறட்சியைத் தடுக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.

நெல்லிக்காய் ஜூஸ் அம்லா ஜூஸ்

நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வர கெட்ட கொழுப்புகள் மாயமாகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.

கம்பு கிச்சிலி சம்பா கூழ் மிக்ஸ்

கம்பங்கூழ் கோடை வெயிலுக்கு இதமானது. கம்பில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. இவைகள் உடலில் எளிதில் செரிமானத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் கம்பங்கூழ் அருந்தலாம். கிச்சிலி சம்பா அரிசியில் இரும்புச்சத்து சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. இரண்டையும் இணைத்து மிக்ஸ் ஆக www.tredyfoods.comமில் விற்பனை செய்கின்றனர். பாட்டியின் கைமணம் இந்த கம்பு கிச்சிலி சம்பா கூழ் மிக்ஸ்சில் கிடைக்கிறது.

இன்னும் கோடைக்கேற்ற சத்தான சுவையான உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இயற்கை பானங்கள், கற்றாழை ஜூஸ், கறும்பு சாறு, பதநீர், பனங்கற்கண்டு, எலுமிச்சை கேன்டி, கிவி கேண்டி, ஆப்ரிகாட்,சீரகம், வெட்டிவேர், பனை வெல்லம், ஆர்கானிக் வெந்தையம் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.

வெயிலில் வெளியே அலையாமல் கோடையை குளிர்ச்சி தரும் பொருட்களுடன் கொண்டாட www.tredyfoods.com ஆர்டர் செய்யுங்கள் உங்கள் வீடு தேடி பாதுகாப்பாக பொருட்கள் வரும்.