September 16, 2018
பண்டிகை வந்தாலே பலகாரங்கள் களைகட்டும். அதுவும் விநாயகர் சதுர்த்தி நாளில் பிள்ளையாருக்கு அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, முக்கனிகள், சர்க்கரை படையலிட்டு, அருகம்புல், எருக்கம்பூ மாலை சாற்றி வணங்குவது வழக்கம். விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை செய்வதற்கான மாவும், கொழுக்கட்டை அச்சும் tredyfoods.com மில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை டிரெட்டி ஃபுட்ஸ் உடன் கொண்டாடலாம்.
பிள்ளையார் சுழி போட்டு எந்தச் செயலையும் தொடங்குவது மரபு. முழுமுதற்கடவுளான விநாயகரை தினம் தினம் வணங்கினாலும் விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆவணி மாதம் அமாவாசை முடிந்து வளர்பிறையில் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரை அடி களிமண் பிள்ளையார் தொடங்கி பத்தடியில் பிரம்மாண்ட பிள்ளையார் வைத்து வழிபட்டு தினம் தினம் படையலிட்டு வழிபட்டு மேளதாளங்களுடன் வழியனுப்பி வைப்பது மரபு.
கொழுக்கட்டை அச்சு :
விநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகளை சுத்தம் செய்வது தொடங்கி கொழுக்கட்டை செய்வதற்கான மாவு தயாரிப்பது, பூரணம் செய்வது வரை பிசியாக இருப்பது இல்லத்தரசிகளின் வழக்கம். இந்த ஆண்டு இல்லத்தரசிகளின் வேலைப்பளுவை குறைப்பதற்காகவே tredyfoods.com ஆன்லைன் ஸ்டோரில் கொழுக்கட்டை மாவு, கொழுக்கட்டை அச்சினை அறிமுகம் செய்துள்ளனர். மரத்தினால் செய்யப்பட்ட இந்த கொழுக்கட்டை அச்சு இல்லத்தரசிகளுக்கு சுவையான, அதிக அளவிலான கொழுக்கட்டை செய்வதற்கு உதவி செய்கிறது.
கொழுக்கட்டை :
கொழுக்கட்டை செய்வது ஒரு கலை ஒரே சைஸில் அளவாக மாவு, பூரணம் வைத்து செய்வதற்கு தனி திறமை தேவைதான். என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் ஒரே அளவில் கொழுக்கட்டை வராது. ஆனால் tredyfoods.com கொழுக்கட்டை அச்சில் வைத்து செய்யப்படும் கொழுக்கட்டையின் அளவு ஒரே சீராக அளவாக இருக்கும். பண்டிகை காலம் நெருங்கத் தொடங்கியுள்ளதால் கொழுக்கட்டை அச்சினையும், கொழுக்கட்டை மாவினையும் ஆர்டர் செய்யுங்கள் உடனே வீடு தேடி வரும்.