Shopping Cart

ருசியோடு ஆரோக்கியத்தை பரிசளிக்கும் டிரெட்டிபுட்ஸின் பாரம்பரிய பாத்திரங்கள்

September 16, 2018

ருசியோடு ஆரோக்கியத்தை பரிசளிக்கும் டிரெட்டிபுட்ஸின் பாரம்பரிய பாத்திரங்கள்

நம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் பாத்திரங்களை வைத்தே இல்லத்தரசிகளுக்கு மதிப்பு அதிகரிக்கிறது. நமக்கு பிடித்த பாத்திரங்களை வாங்கி சுவையாக சமைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு நாவிற்கு ருசியாக சாப்பிட கொடுப்பது ஒரு கலை.  பண்டைய காலங்களில் மண்பானை பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இன்றைய தலைமுறையினர் குக்கர், நான்ஸ்டிக், டெஃப்லான் கோட்டிங் பாத்திரங்களுக்கும் மாறிவிட்டனர். பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் tredyfoods.com இரும்பு, பித்தளை, சோப்ஸ்டோன், மரத்தினால் செய்யப்பட்ட பாத்திரங்களை ஆன்லைனில் விற்பனை செய்வதோடு மக்களுக்கு ஆரோக்கியத்தையும் பரிசளிக்கின்றனர். 

நம்முடைய உடம்பிற்கு இரும்புச்சத்து அவசியம். இன்றைக்கு இந்திய பெண்களில் 80% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட  சூழ்நிலையில் இரும்பு பாத்திரத்தில் சமைப்பது அவர்களுக்கு மிகவும் நல்லது.   நாம் சமைக்கும் பாத்திரங்களின் மூலமும் இரும்புச்சத்து உடலுக்குச் செல்கிறது. இரும்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் உடல் வெப்பம் தணிவதோடு ரத்த சோகை நீங்கி உடலும் நலமடையும்.

இரும்பு தோசைக்கல் :

இரும்பு பாத்திரங்களை வாங்க எங்கே போவது என்று யோசிக்க வேண்டாம் https://www.tredyfoods.com மில் இரும்பினால் செய்யப்பட்ட தோசைக்கல், இரும்பு கரண்டி, வடைச்சட்டி, கடாய் என  பல பாத்திரங்களை விற்பனை செய்கின்றனர். இரும்பு பாத்திரங்களை அடுப்பில் வைத்த உடன் சூடாக தாமதமாகும். சூடான உடன் சூட்டினை நன்றாக தக்க வைத்துக்கொள்ளும். இரும்பு தோசைக்கல்லில் தோசை சுடுவது எளிதாக இருக்கும். சுடச் சுட சுவையான தோசையை சாப்பிட வீட்டில் போட்டி அதிகமாகும். இன்றைக்கும் பலரது வீட்டிலும் பாட்டி காலத்தில் வாங்கிய தோசைக்கல்லை பழக்கி வைத்திருப்பார்கள். பாரம்பரியத்தை விரும்புபவர்களும், வெளிநாட்டில் வசிப்பவர்களும் இரும்பு தோசைக்கல்லை ஆன்லைனில் www.tredyfoods.com மில் ஆர்டர் செய்து வாங்கலாம். 

பித்தளை பில்டர் காஃபி டிகாசன் மேக்கர் :

காலை எழுந்த உடன் காஃபி என்றாகிவிட்டது. அந்த காஃபியும் பில்டர் காஃபியாக ருசியாக சுடச்சுட பித்தளை டபாரா செட்டில் இருக்கவேண்டும் என்று விரும்புவர்கள் பலர் இருக்கிறார்கள். ஃபில்டர் காஃபி பிரியர்களுக்காகவே பித்தளையில் செய்யப்பட்ட காஃபி டிகாசன் மேக்கர், காபி டபாரா செட்டுகள்  tredyfoods.com மில் விற்பனை செய்கின்றனர். உடனே ஆர்டர் செய்து வாங்கி உங்க வீட்டிலேயே பேமஸ் கும்பகோணம் டிகிரி காஃபி போட்டு சுவைக்கலாம். 

சோப்ஸ்டோன் பணியாரக்கல் :

பணியாரம் சாப்பிட பலருக்கும் ஆசைதான். சோப்ஸ்டோனில் செய்யப்பட்ட பணியாரக்கல்லில் சுடப்படும் பணியாரத்தின் சுவையே அலாதியானது. சோப் ஸ்டோன் பணியாரக்கல்  சீராக வெப்பத்தை உட்கிரகித்து தக்கவைக்கும் தன்மை கொண்டது. கல் சட்டிகள் சீராக வெப்பம் அடைவதால் இதில் சுடப்படும் பணியாரம் பொன்னிறமான இருக்கும். பணியாரத்தின் நிறமும் மணமும், அலாதியான சுவையும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ப்பிடும் ஆர்வத்தை தூண்டுகிறது. நீண்ட காலத்திற்கு உழைக்கக்கூடிய சோப் ஸ்டோன் பணியாரக்கல்லில் சுடச்சுட சுவையான பணியாரம் சுட்டு சாப்பிட ஆசையா? உடனே Tredyfoods.comமில் ஆர்டர் செய்தால் பத்திரமாக வீடு தேடி வரும் பணியாரக்கல். 

கொழுக்கட்டை அச்சு :

கொழுக்கட்டை பிள்ளையாருக்கு மட்டும் பிடித்தமானது அல்ல நம்ம வீட்டு பிள்ளைகளுக்கும் பிடித்தமானது. அரிசி மாவு, வெல்லம், தேங்காய் பூ, வேகவைத்த கடலைப்பருப்பு என பூரணமாக சேர்த்த கொழுக்கட்டை சாப்பிட சாப்பிட ஆசையை அதிகரிக்கும். கொழுக்கட்டை அச்சில் வைத்து எளிதாக கொழுக்கட்டை செய்யலாம். மரத்தால் செய்யப்பட்ட கொழுக்கட்டை அச்சு www.tredyfoods.comமில் விற்பனை செய்யப்படுகிறது. தயிர் மத்து, பருப்பு கடைசல் மத்து, மர தோசைக்கரண்டி, சாம்பார் கரண்டி என மரத்தினால் ஆன பொருட்களும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. அத்தனை பாத்திரங்களையும் தேடி தேடி அலையவேண்டாம், ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே போதும் பாத்திரங்கள் பத்திரமாக வீடு தேடி வரும். சமையலறையில் அடுக்கி வைத்து ருசியாக சமைத்து கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். அக்கம் பக்கத்தினரும் ஆர்வமாக பார்த்து உங்களை பாராட்டுவார்கள். 




Menu