Dear Customers , Please note delivery of orders could be delayed due to Lockdown related restrictions imposed by State Governments

சுவையை வீடு தேடி தரும் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர் - ட்ரெட்டி ஃபுட்ஸ் சக்சஸ் ஸ்டோரி

September 16, 2018

சுவையை வீடு தேடி தரும் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர்  - ட்ரெட்டி ஃபுட்ஸ் சக்சஸ் ஸ்டோரி

பாரம்பரியம் மிக்க சுவையான பலகாரங்களை மிகச்சிறிய அளவில் ஆன்லைனில் விற்பனை செய்யத் தொடங்கிய ட்ரெட்டி ஃபுட்ஸ்  இன்றைக்கு ஆயிரக்கணக்கான பொருட்களுடன் சர்வதேச அளவில் மக்களை சென்றடைகிறது. இரண்டே ஆண்டுகளில் மனதில் உணவுப் பிரியர்களின் மனதில் இடம் பிடித்த https://www.tredyfoods.com சக்சஸ் ஸ்டோரி  சுவையானதுதான். 

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக கடைகள் இருக்கும். சுவைமிக்க பலகாரங்களை சாப்பிட விரும்புபவர்கள் கடைகளுக்கு சென்று வாங்கி சுவைப்பது வழக்கம். கிராமங்களில் வசிப்பவர்கள் நகரங்களுக்கு சென்றால் மட்டுமே அந்த ஊர்களுக்கே உரித்தான பலகாரங்களை வாங்கிக்கொண்டு வருவார்கள். அதை பங்கு வைத்து சாப்பிடுவது அலாதியான சுகம். பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள் வீடுகளுக்கும் பங்கு போகும். 

ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர் :

இன்றைக்கு பலகாரங்களை அதன் சுவைக்காக தேடிப்பிடித்து சாப்பிடுபவர்கள்தான் அதிகம். திரும்பிய பக்கமெல்லாம் ஸ்நாக்ஸ் கடைகள் முளைத்திருந்தாலும் அவசர யுகத்தில் அனைவராலும் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க முடிவதில்லை. அப்படியே வாங்கி சாப்பிட்டாலும் பாரம்பரிய ருசி கிடைப்பதில்லை. எதையோ மிஸ் செய்கிறோமே என்று ஏங்கத் தொடங்குகிறது மனது.  மனதிற்கு பிடித்த சுவையான பலகாரங்களை அந்தந்த ஊரின் பாரம்பரிய முறைப்படி மக்கள் சுவைக்க வேண்டும் என்பதற்காகவே ருசிப்பிரியர்களுக்காக  https://www.tredyfoods.com என்ற ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர் தொடங்கப்பட்டது.

ஆறில் தொடங்கிய பயணம் : 

ஆறு பொருட்களுடன் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ஸ்நாக்ஸ் ஸ்டோர் இன்றைக்கு ஆயிரக்கணக்கான பொருட்களை விற்பனை செய்யும் அளவிற்கு மிகப்பெரிய ஆன்லைன் ஸ்டோராக வளர்ச்சியடைய காரணம் தரமும், சுவையும்தான். சேவு, முறுக்கு, அதிரசம், அல்வா என ஊரின் பெருமை சொல்லும் பலகாரங்களை அந்தந்த ஊர்களுக்கே சென்று வாங்கி சாப்பிடுவது என்பது அனைவராலும் இயலாத காரியம். சாத்தூர் சேவு, கோவில்பட்டி கடலைமிட்டாயை சுவைக்க விரும்புவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அவற்றை ஆர்டர் செய்து வாங்கி சுவைக்கலாம். ஆர்டர் செய்த  பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பத்திரமாக கொண்டு சேர்ப்பதும் https://www.tredyfoods.com மின் வெற்றியின் ரகசியம்.

சத்தான சுவையான பலகாரங்கள் :

கடைகளுக்கு சென்று சுவைத்து பார்த்து வாங்கினால் கூட இத்தனை தரமான பொருட்கள் உங்களுக்கு கிடைக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அந்த அளவிற்கு தரமான பொருட்களை டோர் டெலிவரி செய்கின்றனர். பொருட்களின் விலையும் நியாயமாகவே இருக்கிறது. பாரம்பரியம் மிக்க பலகாரங்களை விற்பனை செய்யத் தொடங்கிய www.tredyfoods.com இன்றைக்கு பாரம்பரியம் மிக்க பாத்திரங்களையும் விற்பனை செய்கின்றனர். சத்தான சுவையான உணவுகளை வீட்டிலும் சமைத்து சாப்பிட வேண்டும் என்பதே ட்ரெடி ஃபுட்ஸின் உயர்ந்த நோக்கம். 

எங்கேயும் எப்போதும் வீடு தேடி வரும் :

இந்தியாவின் எந்த ஊரில் இருந்து ஆர்டர் செய்தாலும் பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்பட்டு இலவசமாக உங்கள் கைகளை வந்தடைகிறது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யபவர்களின் கைகளுக்கும் பொருட்கள் பத்திரமாக சென்றடைகிறது. சின்னச் சின்ன மழைத்துளி பெருவெள்ளமாவது போல சிறிய அளவில் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோராக தொடங்கப்பட்ட www.tredyfoods.com இன்றைக்கு ஆலமரமாக வீ ஆர் த பெஸ்ட் என வாடிக்கையாளர்களின் ஆதரவினால் வளர்ந்து நிற்கிறது.