Shopping Cart

சோப் ஸ்டோன் பணியாரக்கல்

September 16, 2018

சோப் ஸ்டோன் பணியாரக்கல்

ஆரம்ப காலத்தில், மண்பாண்டத்தில் உணவு சமைத்து, அவற்றை சாப்பிட்டு வந்தவர்கள், நீண்ட ஆயுளுடன் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழ்கின்றனர். மண்பாண்டம் போலவே சோப் ஸ்டோன் எனப்படும் மாக்கல் சமையல் பாத்திரங்கள் பாரம்பரியம் கொண்டவை. இந்த கல்லில் செய்யப்பட்ட பொருட்களுக்கு கேரளா மாநிலத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. சோப் ஸ்டோனில் செய்யப்பட்ட பணியாரக்கல்லில்  சுடப்படும் பணியாரத்திற்கு சுவை அதிகம் என்கின்றனர் ருசிப்பிரியர்கள்.

 

சோப் ஸ்டோன் பணியாரக்கல்  சமமாக, சீராக வெப்பத்தை உட்கிரகித்து தக்கவைக்கும் தன்மை கொண்டது. கல் சட்டிகள் சீராக வெப்பம் அடைவதால் இதில் சுடப்படும் பணியாரம் பொன்னிறமான கிடைக்கிறது. நிறமும், மணமும், சுவையும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பணியாரம் சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுகிறது. நீண்ட காலத்திற்கு உழைக்கக்கூடியது இந்த பணியாரக்கல். சோப் ஸ்டோன் பணியாரக்கல்லில் சுடச்சுட சுவையான பணியாரம் சுட்டு சாப்பிட ஆசையா? உடனே Tredyfoods.comமில் ஆர்டர் செய்தால் பத்திரமாக வீடு தேடி வரும் பணியாரக்கல். 

 

சோப் ஸ்டோன் பாத்திரத்தை சமைக்க பழக்குவது எப்படி?

சோப் ஸ்டோன் பாத்திரங்களை வாங்கிய உடனேயே சமைக்க முடியாது. உணவு சமைப்பதற்கு ஏற்றார் போல பழக்க வேண்டும். பத்து நாட்கள் இந்த பழக்கும் வேலை நடைபெற வேண்டும். பாத்திரத்தை பழக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

  • முதலில் சோப் ஸ்டோன் சட்டியை நன்றாக நியூஸ் பேப்பர் கொண்டு துடைக்க வேண்டும். விளக்கெண்ணெய் உடன் மஞ்சள் தூள் கலந்து இரண்டு பக்கமும் நன்றாக தடவி வைக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு இதே போல விளக்கெண்ணெய் மஞ்சள் தூள் கலந்து தடவு பாத்திரத்தை கவிழ்த்து வைக்க வேண்டும்.
  • நான்கு நாட்களில் சோப் ஸ்டோன் சட்டி வெண்மை நிறத்தில் இருந்து சற்றே கறுப்பாக மாறி விடும். 5 ஆம் நாள் காலையில் பாத்திரத்தில் ஒட்டியுள்ள எண்ணெயை டிஸ்யூ காகிதம் கொண்டு துடைக்க வேண்டும்.
  • பாத்திரத்தில் சுடுநீர் ஊற்றி நன்றாக சுத்தம் செய்து அந்த தண்ணீரை கீழே கொட்டி விட்டு நன்றாக துடைத்து ஒருநாள் முழுக்க உலர வைக்க வேண்டும்.
  • அடுத்த மூன்று நாட்களுக்கு சூடான அரிசி மாவு தண்ணீர் அல்லது ஸ்டார்ச் கலந்த தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும். தினசரியும் இதே போல ஸ்டார்ச் மாவு தண்ணீரை மாற்றி ஊற்றி வைக்க வேண்டும்.
  • 10 ஆம் நாளில் ஸ்டார்ச் மாவு தண்ணீரை முழுவதுமாக கொட்டி விட்டு லேசான சோப்பு தண்ணீர் வைத்து சோப் ஸ்டோன் பாத்திரத்தை கழுவ வேண்டும். இப்போது பாத்திரம் நன்றாக கறுப்பாக மாறியிருக்கிறது. அதில் சூடான நீரை ஊற்றி குளிர வைக்க வேண்டும்.
  • 11 ஆம் நாள் தண்ணீர் பாத்திரத்தில் குளிர்ந்த பின்னர் ஸ்டவ்வை பற்ற வைத்து மிதமான சூட்டில் சூடேற்றவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் ஸ்டவ்வை நிறுத்தி விடவும். இப்போது பாத்திரம் சமைக்கும் அளவிற்கு தயாராகி விட்டது. சோப் ஸ்டோன் பாத்திரத்தை முதலில் சமைக்கும் போது சில நாட்களுக்கு மிதமான சூட்டில் வைத்து சமைக்க வேண்டும். இல்லையெனில் பாத்திரம் உடைந்து விட வாய்ப்பு உள்ளது. அதே போல அடுப்பில் வைக்கும் போது வெறும் பாத்திரத்தை வைத்து சூடேற்றக் கூடாது.



Menu