Your Cart

தேன் தேன்...சுவைத்தேன்

August 24, 2018

தேன் தேன்...சுவைத்தேன்

தேன் தேன்...சுவைத்தேன்
தேனை நினைத்தாலே நாவெல்லாம் இனிக்கும். இனிமை மட்டுமல்ல சத்தோடு மருத்துவ குணமும் கொண்ட தேன் ஆதி காலத்தில் வசிக்கும் மக்களின் மிகச்சிறந்த உணவுப்புப்பொருளாக இருந்துள்ளது. 
கானகத்தில் வசித்தவர்களும், இன்றைக்கும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேனும் தினைமாவும் கலந்து சாப்பிடுகின்றனர். அதனால்தான் அவர்களுக்கு எந்த வித மருந்தும் தேவைப்படவில்லை. இன்றைக்கு தேவையற்ற நஞ்சுக்களை உணவாக சாப்பிடுவதால் மருந்தாக தேனை பயன்படுத்த வேண்டியுள்ளது. 
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை பலரது வீட்டிலும் தேன் பாட்டில் இருக்கும்.  இஞ்சியையும் பேரிச்சம்பழத்தையும் அந்த தேனில் நறுக்கி போட்டு குழந்தைகளுக்கு காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட கொடுப்பார்கள். இப்போது அந்த பழக்கம் இருக்கிறதா என தெரியவில்லை. 
பூ பூவாய்  நுழைந்து மலரின் மதுவை உறிஞ்சும் தேனீக்கள் அவற்றை தனது வயிற்றில் சேகரித்து வந்து தேன் கூட்டிற்கு கொண்டு வந்து சேகரித்து பாதுகாக்கின்றன. இவையே நமக்கு தேனாகக் கிடைக்கின்றன. எந்தப் பூவில் இருந்து தேன் எடுக்கப்படுகிறதோ, அந்தப் பூவின் தன்மையைப் பொருத்து தேனின் தன்மையும் குணமும் மாறுபடும். வித விதமாக பல வகை பொருட்களுடன் மதிப்பு கூட்டப்பட்டு tredyfoods.comல் விற்பனை செய்யப்படுகிறது. 
வைட்டமின் சத்துக்கள்
தேனில் வைட்டமின்கள் B2,B6,K மற்றும் சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், அக்ஸாலிக் அமிலம், குளுக்கோஸ், பாஸ்பரஸ், கந்தகம், இரும்புச்சத்து, உப்புச்சத்து, மக்னீசியம், கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. 
தேனின் வகைகள்
கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், என தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மலைகளில் கிடைப்பது மலைத்தேன்.  அனைத்து மருந்துகளுடனும் சேர்த்துப் பயன்படுத்தலாம். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இந்த மலைத்தேன் கண் நோயைக் குணப்படுத்தக்கூடியது.
மரத்தில், காடுகளில், குகைகளில் கூடுகட்டியிருக்கும் தேன் கூட்டில் இருந்து  கிடைப்பது கொம்புத்தேன்.  வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும். பொதுவாக, தேனை நல்ல தூக்கம், தொண்டைக்கட்டு, உடல் எடை, மேனி அழகு, வயிற்றுப்புண், கொப்புளம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
தேனின் மருத்துவ குணங்கள்:
நச்சுக் கலக்காத இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் தேனும் ஒன்று. சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடியது தேன் என்று கூறப்பட்டுள்ளது. 
வேப்ப மரப்பூவிலிருந்து கிடைக்கும் தேன் மருத்துவ குணம் உடையது. வயலில் நெல்லிலிருந்து கிடைக்கும் தேன் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. ஒவ்வொரு பூக்களிடமிருந்து கிடைக்கும் தேன் ஒவ்வொரு மருத்துவ குணம் உடையதாக இருக்கிறது. 
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட, நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை.
தேனை  வெந்நீர்  சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், வயிற்றுப்போக்கு சரியாகும். துளசி, தும்பை மற்றும் தேனை சிறிது சிறிதாய் சேர்க்க, மூச்சுத் திணறல் குறையும்.
ஒரு டீஸ்பூன் அளவு பூண்டு சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் இருவேளை சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் 
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடும்படி பலராலும் வலியுறுத்தப்படுகிறது. இந்த தேன் நெல்லி, கடைகளிலும் கிடைக்கிறது. இதை தினமும் சாப்பிடுவதால்  ரத்தம் சுத்தமாவதோடு, ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நீங்கும். இதயத் தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.
கண் பிரச்சினை உள்ளவர்கள், தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தால், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண்கள் சிவப்பாதல் போன்றவை குணமாகும். பசியின்மையால் அவதிப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் உட்கொண்டு வந்தால் நிவாரணம் கிட்டும்.
அடிக்கடி ஜலதோஷம், தொண்டைப்புண்ணால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட்டுவர வேண்டும். அதன்மூலம், உடலில் சேர்ந்த சளி அனைத்தும் வெளியேறிவிடுவதோடு, தொண்டைப்புண்ணும் குணமாகும்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிட்டால், முகப் பொலிவு அதிகரிக்கும். சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் வருவது தடுக்கப்படும், அப்பிரச்சினைகள் இருந்தாலும் குணமாகி விடும். முடி கொட்டும் பிரச்சினை உள்ளவர்கள் தேன் நெல்லிக்காயைச் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள மருத்துவக் குணங்களால் முடி கொட்டுதல் தடுக்கப்படுவதோடு முடியின் வளர்ச்சி அதிகமாகும்.
நாவல் தேன் 
நாவல் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியது. நன்மை செய்யும் கொழுப்பு சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தது. ஜீரண சக்தியை அதிகரிக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது. நாவல் பழ மரங்களின் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேன் அதிக மருத்துவ குணம் கொண்டது. மருத்துவ சக்தி கொண்ட நாவல் பழத்துடன் வைட்டமின் சத்து நிறைந்த தேனும் கலந்து சாப்பிடுவதனால் உடலில் ஊட்டச்சத்து அதிகரிக்கும். 
தேனும் தினைமாவும்
நாவல், வேம்பு, முருங்கை, மா, தும்பை, துளசி, பூண்டு என தேன் வகைகள் பல உள்ளன. 
சித்த மருத்துவத்தில் தேன் கிடைக்கக்கூடிய இடத்தைப் பொருத்து, தேனை பலவகையாக பிரிக்கின்றனர். tredyfoods.comல் தேனுடன் கலந்த பேரிச்சை, தேன் நெல்லிக்காய், ரோஜா குல்கந்து, துளசி தேன், தேனும் தினைமாவும் கலந்த குக்கீஸ், உலர் பழங்கள் இணைந்த தேன், லவங்கப்பட்டை தேன் என பல வகையில் தேன் மதிப்புக்கூட்டப்பட்டு விற்பனையாகிறது இதனை  வாங்கி சுவையுங்கள்.